யாழில் கொள்ளையர்களால் வயோதிப பெண்ணிற்கு நடந்த சோகம்!

யாழில் வயோதிப பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருக்கும்போது வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் அப்பெண்ணை தாக்கி கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.சாவகச்சோி – மீசாலை ஐயா கடை சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல், மூதாட்டியின் கன்னத்தில் அறைந்து, வீட்டில் இருந்த பத்தரை பவுன் நகை மற்றும் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றது.

முகமூடி மற்றும் கையுறை அணிந்து வீட்டிற்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல் மேற்படி துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

Previous articleபேரீச்சம் பழத்தின் 7 ஆரோக்கிய நன்மைகள்!
Next articleயாழில் ஆலயத்தில் பக்தர் ஒருவரின் சைக்கி திருடிச்சென்ற முதியவர்!