மன்னாரில் முதியவரின் உயிரை பறித்த பேருந்து!

வீதியில் நின்று கொண்டிருந்த முதியவரின் மீது கட்டுபாடின்றி வந்த அரச பேருந்து மோதி முதியவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (18) மாலை மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தைத் தொடர்ந்து, பேருந்தின் சாரதியும் நடத்துனரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், விபத்து தொடர்பான பேருந்தை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

அதன் பின்னர் குறித்த பஸ் சம்பவ இடத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Previous articleமகன் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Next articleயாழ் நகருக்கு அண்மையில் உதயமாகவுள்ள மையம் : வெளியான அறிவிப்பு!