யாழில் இளம்பெண்ணை மிரட்டி 1500 ரூபாய் வாங்கிச்சென்ற ஆட்டோ சாரதி : அவரை நன்கு கவனித்து அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர்கள்!

யாழ். இந்துக்கல்லூரியில் இருந்து யாழ் நகரிற்கு வருவதற்கு 1500 தரும்படி மிரட்டி இளம் பெண்ணிடம் இருந்து ஆட்டோ சாரதி ஒருவர் 1500 ரூபாய் பெற்றுச்சசென்றுள்ளார்.

இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ் நகரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் யாழ். இந்துக்கல்லூரியில் இருந்து யாழ். நகரிற்கு செல்ல ஆட்டோ சாரதியிடம் எவ்வளவு என கேட்டபோது சாரதி ஏறுங்கள் பார்த்துக்கொள்ளலாம் என கூறி அழைத்துச்சென்றுள்ளார்.

இதனையடுத்து யாழ் நகரில் இறங்கும்போது அதற்கு 2000 ரூபாய் என கூறியுள்ளார் அதிர்ச்சியுற்ற இளம்பெண் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆட்டோ சாரதி மிரட்டி கேட்டதில் தன்னிடம் 1500 தான் உள்ளது என பெண் கூறியதையடுத்து அதை வாங்கி சென்றுவிட்டார் இதனையடுத்து அழுதுகொண்டு வந்து அங்கு தரிப்பிடத்தில் இருந்த ஆட்டோசாரதிகளிடம் அப்பெண் நடந்ததை கூறியதையடுத்து.

ஆட்டோ சாரதிகள் சந்தேக நபரை மடக்கபிடித்து ஆட்டோவிற்கான காசு போக மீதி காசை இளம் பெண்ணிற்கு கொடுத்ததையடுத்து அந்நபரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Previous articleஅவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இலங்கையின் கலாச்சார விழா!
Next articleமாமாவின் மரணச்சடங்கிள் பங்குபெற்ற மருமகன் மீது விழுந்த மரக்கிளை : சம்பவ இடத்தில் பலியான சோகம்!