யாழில் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்களின் 6ம் ஆண்டு நினைவேந்தல் இன்று!

பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான கஜன் மற்றும் சுலக்சன் ஆகியோரின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.

2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம், கொக்குவில் குளப்பிட்டி சங்குராவிற்கு அருகில் பொலிஸாரின் மிலேச்சத்தனமான துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாகிய நடராசா கஜன்.பௌன்ராஜ் சுலக்சனின் நினைவு தினம் இன்று.

இதன்போது, ​​யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள கஜன் மற்றும் சுலக்சன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Previous articleடி20; சூப்பர் 12க்கு முன்னேறியது இலங்கை!
Next articleகடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!