கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் வந்த 183 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஆஸ்திரேலிய கடலோர காவல்படையின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்ற பிராந்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத குடியேற்ற படகுகள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது நாட்டுக்கு வரும் அனைத்து அகதிகளையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவை சென்றடைய சுமார் 21 நாட்கள் ஆகும் எனவும் ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.