யாழில் மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் மீன் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது தொடர்ந்து எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால் மீனவர்கள் நாள்தோறும் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மழைக்காலம் துவங்கியுள்ளதால், சந்தைகளில் அதிகளவு கடல் உணவுகள் கிடைக்கின்றன.

அதைவிட கவுரி விரதத்தால் பலர் கடல் உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.

இதனால் மீன் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதன்படி கடந்த வாரம் கிலோ 1000 ரூபாவிற்கு விற்பனையான மீன் தற்போது கிலோ 600 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.