மனைவியுடன் இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் குத்திக்கொலை!

கிரிபத்கொடை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்திலியாகுடுவ பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார். பலத்த காயமடைந்த நபர் கிரிபத்தகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹுனுப்பிட்டி, வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான ஒருவராவார்.

இந்த நிலையில் குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படும் 33 வயதுடைய நபர் கிருபத்கொடை பொலிஸ் நிலையத்தில் ஆயுதத்துடன் சரணடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்தகொட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Previous articleபாடசாலைகளுக்கான இரண்டாம் , மூன்றாம் தவணை விடுமுறை குறித்த அறிவிப்பு !
Next article2022 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பதிகதி நீடிப்பு!