2022 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பதிகதி நீடிப்பு!

2022ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 011 2785231, 011 2785216 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலமும் அவசர இலக்கமான 1911 க்கு அழைப்பதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous articleமனைவியுடன் இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் குத்திக்கொலை!
Next articleயாழில் கைதான இளைஞர் : வெளியான காரணம்!