யாழில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த வாகனம்!

யாழ். வீதியில் வாகனம் ஒன்று பயணித்துக்கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – மாவிட்டபுரத்தில் காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

இன்று (21-10-2022) இரவு குறித்த வாகனத்தில் சாரதி மாத்திரம் பயணித்த போது இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் எனினும் சரியான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின் பின்னர் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து தீயணைப்பு இயந்திரம் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்ட போதிலும் விமானம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஉலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் போட்டியில் இலங்கை வீரர் பெற்ற முதலிடம்!
Next articleவிடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடைத்த பல்கலை மாணவன்!