விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடைத்த பல்கலை மாணவன்!

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதியில் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் பண்டாரகமவில் வசிக்கும் 25 வயதுடைய மாணவன் இன்று (21-10-2022) காலை உயிரிழந்துள்ளார்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான சிங்கராஜா விடுதிக்குள் ஹர்ஷ தனஞ்சய என்ற மாணவர் உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.