யாழில் பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இடம்பெற்றுவரும் அவல நிலை!

பஸ்களில் பயணிக்கும் யுவதிகளிடம் கைத்தொலைபேசிகளை திருடும் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 9 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம், பலாலி போன்ற இடங்களில் பஸ்களில் பயணிக்கும் யுவதிகளிடம் கைத்தொலைபேசிகளை சந்தேகநபர் திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிக்கோலஸ் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காவல் நிலையங்களில் புகார் அளித்தவர்கள் தங்கள் தொலைபேசியை அடையாளம் காணுமாறு மாவட்ட குற்றத்தடுப்பு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Previous articleஅகில இலங்கை ரீதியாக சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவன்!
Next articleபாடசாலை மாணவிகள் கழிவறையில் வீசப்பட்டிருந்த கரு!