இளம் தலைமுறையினர் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பு!

இளம் தலைமுறையினரிடையே எச்.ஐ.வி., வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக, பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்புக்கான தேசிய திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்துடன் முடிவடைந்த காலப்பகுதியில் எச்.ஐ.வி. ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி, தொற்றுக்குள்ளான 53 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 15 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவித்தார்.

இளம் தலைமுறையினரிடையே எச்.ஐ.வி., தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. 2021 ஆம் ஆண்டில், 15 முதல் 30 வயதுக்குட்பட்ட 25 எச்ஐவி-பாதிக்கப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த ஆண்டு 53 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குழந்தைகள் இணையம் மூலம் கல்வி கற்று வருவதால், அவர்கள் இணையத்தில் பாலியல் தொடர்பான பல்வேறு வீடியோக்களை பார்ப்பதால், இளைஞர்களிடையே எச்.ஐ.வி. பரவுவதே காரணம் என்று நினைக்கிறோம்.

இதில் ஆண் குழந்தைகளே அதிகம். 2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில், 30 சிறுவர்கள் எச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Previous articleபாடசாலை மாணவிகள் கழிவறையில் வீசப்பட்டிருந்த கரு!
Next articleதமிழர்களை தொடர்ந்து சிங்கள் மக்களும் இலங்கையிலிருந்து படகுகளில் வெளியேறுகின்றனர்!