இலங்கையை நெருங்கும் சூறாவளி! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24ம் தேதி புயலாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அக்டோபர் 20, 2022 அன்று வடக்கு அந்தமான் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல்

மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது 22ஆம் தேதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழில் பேருந்தில் பயணித்த யுவதியை பிளேட்டினால் வெட்டிய இளைஞன்!
Next articleவாகனம் கொள்வனவு செய்ய விரும்பும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!