யாழில் பாடசாலையினுள் போதைப்பொருள் பாவித்து கையினை பிளேடால் அறுத்த மாணவன்!

யாழில் உள்ள பாடசாலைக்கு போதைப்பொருளுடன் வந்த மாணவன் ஒருவன் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

குறித்த மாணவன் போதை ஊட்டிய பாக்குடன் பாடசாலைக்கு வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆசிரியர்கள், மாணவனிடம் விசாரணை நடத்தி பையை மீட்டனர்.

அதன்பின், இச்சம்பவம் குறித்து அதிபர் ஊடாக அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், மாணவன் கையை வெட்டி காயம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் அந்த மாணவன்க்கு பாக்கு கிடைத்தது எங்கிருந்து கிடைத்தது? பள்ளிக்கு அருகில் யாராவது விற்கிறார்களா? இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Previous articleயாழில் தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியின் சங்கிலியை அறுத்த இராணுவ சிப்பாய்! தரமாக கவனித்த ஊரவர்கள்!
Next articleகால்வாயில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!