கால்வாயில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

நாவலப்பிட்டிய மற்றும் குளியாபிட்டிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

எடன்வெல கால்வாயில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 58 வயதுடைய நபர் ஒருவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 பேருடன் வான் ஒன்று தியாவளையில் இருந்து அருவ்பொல நோக்கி சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எடன்வெல கால்வாய்க்கு அருகில் நீர் மட்டத்தை பரிசோதிப்பதற்காக வாகனத்தை விட்டு இறங்கிய வேன் சாரதி கால்வாயில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை நாவலப்பிட்டி, கலப்படவத்தை பிரதேசத்தில் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கேகல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous articleயாழில் பாடசாலையினுள் போதைப்பொருள் பாவித்து கையினை பிளேடால் அறுத்த மாணவன்!
Next articleயாழில் சொந்த வீட்டிலேயே பொருட்களை திருடி விற்பனை செய்து போதைப் பொருள் வாங்கும் நபர் ஹெரோயினுடன் கைது!