யாழில் சொந்த வீட்டிலேயே பொருட்களை திருடி விற்பனை செய்து போதைப் பொருள் வாங்கும் நபர் ஹெரோயினுடன் கைது!

யாழில் சொந்த வீட்டில் உள்ள பொருட்களை திருடி விற்பனை செய்து போதைப்பொருள் வாங்கி வந்த நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று யாழ்.அச்சுவேலி – பத்தமேனி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கைது செய்யப்பட்ட அந்நபர் தொட்ர போதைப்பொருள் பயன்படுத்துவதற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசியதகவலையடுத்து சுற்றிவழைப்பின்போது அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 40 மில்லி கிராம் ஹெரோயின், தேசிக்காய், மற்றும் சிறின்ஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleகால்வாயில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Next articleயாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் சுற்றிவழைப்பின் போது கைது!