யாழில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் சுற்றிவழைப்பின் போது கைது!

யாழில் பொலிஸார் நடத்திய விஷேட சுற்றிவழைப்பின்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.ஊரெழு – பொக்கணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த கசிவு உற்பத்தி செய்யும் தளத்தை சுற்றிவளைத்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

மேலும் 200 லிட்டர் கோடா, 60 லிட்டர் ஸ்பிரிட் மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 1 மணியளவில் கசிவு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதித் லியனகேயின் கீழ் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.