வயோதிப பெண்ணை சுத்தியலால் தாக்கி நகைகளை சுருட்டி சென்ற கொள்ளையர்கள்!

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் வயோதிபப் பெண்ணொருவர் மீது சுத்தியலால் தாக்கப்பட்டு அவரது தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கிண்ணியா – பைசல் நகரைச் சேர்ந்த அப்துல் லத்தீப் பாத்தும்மா (வயது 79) என்ற பெண்மணி தனியாக இருந்த போது, ​​அவரது வீட்டிற்கு வந்த இருவர் சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளனர்.

அதே சமயம் கழுத்தில் இருந்த தங்க ஆபரணங்களை கழற்றி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதனால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சிசிடிவி காட்சிகளை பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleகிளிநொச்சியில் ஆமணங்கு விதையை உண்ட மாணவர்கள் : வைத்தியசாலையில் அனுமதி!
Next articleஇலங்கை ரூபாயின் பெறுமதி – நாட்டு மக்களுக்கு பேரிடியாக வெளியான தகவல்!