தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூடப்படும் மதுபானசாலைகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் நாளை மூடப்படும்.

இது தொடர்பாக கலால் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமால்யத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்டவை தவிர்ந்த அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என பிரதி கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

அந்தந்த பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தீபாவளியை முன்னிட்டு நாளை மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் தெரிவித்துள்ளது.

Previous articleஇலங்கை ரூபாயின் பெறுமதி – நாட்டு மக்களுக்கு பேரிடியாக வெளியான தகவல்!
Next articleஎதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் !