பேருந்துகளில் புதிய தொழிநுட்பத்தின் ஊடாக பேருந்து பயணச்சீட்டு!

பஸ்களில் பயணச்சீட்டு விநியோகிக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேராமுடன் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய முறையின் கீழ் நடத்துனர் அல்லது வாகன உதவியாளர் தேவையின்றி பயணிகளிடம் கட்டணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்படும்.

பேருந்துகள் நடத்துனருடன் அல்லது இல்லாமல் இயங்கலாம்.

இருப்பினும், நடத்துனர்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது.

இந்த இயந்திரங்களில் மொபைல் போன்கள், வங்கி அட்டைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

முழுமையான தரவுகளை விரைவில் அறிமுகம் செய்வதற்காக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.