புகலிடம் கோரி பிரித்தானியா சென்ற இலங்கையர்கள் : தவிர்க்க முடியாமல் முக்கிய முடிவொன்றை எடுத்த மக்கள்!

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள சாக்கோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக நாடு கடத்த பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சாகோஸ் தீவுகளில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர் குழு இலங்கைக்கு திரும்ப விரும்பாத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களை வேறு மூன்றாவது நாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்ப பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாக்கோஸ் தீவுகளின் உரிமை தொடர்பாக பிரித்தானியா மற்றும் மொரிசியஸ் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக பிரித்தானிய அதிகாரிகள் இந்த அவசர முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleபேருந்துகளில் புதிய தொழிநுட்பத்தின் ஊடாக பேருந்து பயணச்சீட்டு!
Next articleபெரஹர நிகழ்வின் போது மின்சாரம் தாக்கியதில் பாடசாலை மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு !