பெரஹர நிகழ்வின் போது மின்சாரம் தாக்கியதில் பாடசாலை மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு !

களுத்துறை – சன்சோடா பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பெரஹரா நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடம்கொட – ஹர்மன் வட்ட பிரதேசத்தில் வசித்து வந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனே இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவன் பெரஹரா நிகழ்வின் போது தீப்பந்தங்களை ஊசலாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த மின் கம்பியில் இரும்பு வளையம் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவனின் சடலம் களுத்துறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleபுகலிடம் கோரி பிரித்தானியா சென்ற இலங்கையர்கள் : தவிர்க்க முடியாமல் முக்கிய முடிவொன்றை எடுத்த மக்கள்!
Next articleஇலங்கையில் அபாயம் நிறைந்த பகுதியாக மாறிவரும் யாழ்ப்பாணம் : வெளியான காரணம்!