தீபாவளி தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்!

நானுஓயாவில்லிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த சரக்கு இன்ஜின் ஒன்று கரையில் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று (24) அதிகாலை 05.00 மணியளவில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் பாரிய குப்பை குவியல் சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பாதையில் மூன்று மணிநேரம் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.

ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் குப்பைகள் அடங்கிய மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் இயந்திரத்தின் வெற்றிட குழாயும் சேதமடைந்துள்ளதாக ஹட்டன் நிலைய அதிபர் தெரிவித்தார்.

ஹட்டன் புறவழிச்சாலையில் வசிக்கும் மக்கள் புகையிரத பாதைக்கு அருகில் குப்பைகளை கொட்டியுள்ளனர்.

இந்நிலையில், ஹட்டன் நகரில் பெய்து வரும் அடை மழை காரணமாக குப்பை குவியல் சரிந்து புகையிரத பாதையில் விழுந்துள்ளதாக புகையிரத நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

தண்டவாளத்தில் இடிந்து விழுந்த குப்பை குவியலை ரயில்வே பராமரிப்பு பணியாளர்கள் அகற்றிய பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

Previous articleயாழில் மாறி மாறி வெட்டிக்கொண்ட கணவன் மனைவி!
Next articleயாழில் பூசகரின் தில்லாலங்கடி வேலையால் ஆலய நிர்வாகத்தினால் பூசகர் வெளியேற்றம்!