கால்வாயில் தவறி விழுந்து பலியான நபர்!

வஸ்கடுவா, சமகிபுர மகா கால்வாயில் இன்று (23) காலை தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வஸ்கடுவா, நுககொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு பெய்த மழையினால் கால்வாயில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், இன்று காலை நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்த போது ஒருவர் படுத்திருப்பதை கண்டு பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகளின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் பூசகரின் தில்லாலங்கடி வேலையால் ஆலய நிர்வாகத்தினால் பூசகர் வெளியேற்றம்!
Next articleஇலங்கையிலிருந்து துபாய்க்கு பணிக்காக சென்ற பெண்களுக்கு நேர்ந்த சோகம்!