யாழ் நாவற்குழி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணம் – கைதடி கமனல் சேவை நிலையத்திற்குட்பட்ட நாவக்குழி கிழக்கு கமக்கார அமைப்பின் நெற்செய்கையாளர்கள் இலவச இயற்கை உரங்களுக்கு விண்ணப்பிக்குமாறு நாவக்குழி கிழக்கு கமக்கார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நெல் விவசாயிகள் விண்ணப்பப் படிவங்களை கமக்கார அமைப்பினரிடம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு சுற்றுச்சூழல் உரங்களான சேதன பசலையும் திரவ உரங்களும் இலவசமாக வழங்கப்படும் எனவும் நாவக்குழி கிழக்கு கமக்கார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கைதடி சமூக நலன்புரி சேவை நிலையத்தின் கீழ் உள்ள ஏனைய கமக்கார அமைப்புகளும் பதிவுகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇலங்கையிலிருந்து துபாய்க்கு பணிக்காக சென்ற பெண்களுக்கு நேர்ந்த சோகம்!
Next articleயாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மருத்துவர் கைது !