யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மருத்துவர் கைது !

யாழில் போதைப்பொருள் விற்பளையில் ஈடுபட்டு வந்த மருத்துவர் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பொலிஸார் பல்வேறு இடங்களில் சுற்றிவழைப்பை மேற்கொண்டுவந்துள்ளனர்.

இதன் போது இரண்டு வைத்தியர்கள் அதிகளவு உயிர்க்கொல்லி மருந்துகளை பிரதான மருந்தகங்களில் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் ஒருவர் அதிகளவு உயிர்க்கொல்லி மருந்துகளை கொள்வனவு செய்துள்ளார்.

அவரது மருந்தகத்தை சுகாதார மருத்துவ அதிகாரி ஆய்வு செய்தார்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியாத, சொந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரின் மருந்தகத்தில் அதிக அளவில் உயிர்க்கொல்லி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

எனினும், இந்த மருத்துவமனையில் இருந்து யாருக்கு மருந்து விநியோகிக்கப்பட்டது அல்லது மருத்துவ தேவைக்காக யாருக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்கள் பதிவேடுகளில் காணப்படவில்லை.

அத்துடன் வவுனியாவைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல மொத்த மருந்துக் கடையொன்றில் இருந்து மாதாந்தம் 400 போதைப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

இவரும் வவுனியாவில் உள்ள அரச வைத்தியசாலையில் பணிபுரிகிறார்.

மருந்திற்கு இவ்வளவு பெரிய அளவிலான கொடிய மருந்து மாத்திரைகள் தேவைப்பட்டிருக்காது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இதேவேளை, இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு மாத்திரமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.