யாழில் தீபாவளி அன்று கிணற்றுக்கட்டில் விளையாடிய இளைஞர் தவறி விழுந்து பலி : அவரை காப்பாற்ற கிணற்றுக்குள் பாய்ந்த நணபனும் பலி!

யாழில் கிணற்றுக்கட்டில் விளையாடிய ஒரு இளைஞர் கிணற்றில் தவறுதலாக விழுந்ததையடுத்து மற்றொருவரும் அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்ததையடுத்து இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று 24 யாழ் வடமராட்சி புலோலி சிங்கநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞர்கள் பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது 24), மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது 24) ஆகிய இரு இளைஞர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் இரு இளைஞர்களும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது ஒருவர் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்துள்ளார்.

அவரை காப்பாற்றுவதற்கு கிணற்றில் பாய்ந்த அவரது நண்பரும் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவர்களின் மற்ற நண்பர்கள் ஊர்மக்களை அழைத்து குறித்த இளைஞர்ளை மீட்டு பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோது இளைஞர்கள் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக விசாரைணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் பற்றி பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் கிலோகணக்கில் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா!
Next articleதேசிய மட்ட அளவில் சாதனை படைத்த வவுனியா மாணவிகள்!