யாழில் சிறுவன் மீது இடம்பெற்ற வாள்வெட்டு : பின்னர் சிறுவனுக்கு நேர்ந்த கதி!

யாழில் சிறுவன் மீது வன்முறை கும்பலல் ஒன்று மேற்கொண்ட வாள்வெட்டில் சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளத.

இவ்வாறு படுகாயமநை்த சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் உரும்பிராய் பகுதியை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் (வயது 17) என்பவர் என தெரியவந்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) மாலை சிறுவன் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது தெல்லிப்பழை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் வழி மறித்து சிறுவனை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில், காயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழில் திடீரென கழமிரங்கிய விசேட படையினர் : வெளியான காரணம்!
Next articleமட்டக்களப்பில் மகன் மார்களுக்கு இடையிலான மோதலில் தாய் பலி!