மட்டக்களப்பில் மகன் மார்களுக்கு இடையிலான மோதலில் தாய் பலி!

மட்டக்களப்பு கல்குடா பட்டியடிச்சேனை பகுதியில் வயோதிப பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் மகனுக்கும் தமக்கையின் மகனுக்கும் இடையில் நேற்று (24) இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (25) இடம்பெறவுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (25) வாழைச்சேனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் சிறுவன் மீது இடம்பெற்ற வாள்வெட்டு : பின்னர் சிறுவனுக்கு நேர்ந்த கதி!
Next articleஇன்று சூரிய கிரகணம்; இதையெல்லாம் மறந்தும் செய்யாதீர்கள்!