இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் திடீரென வாட்சப் செயலி முடக்கம்!

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை 500 கோடிக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்துகின்றனர், ஆனால் இன்று நண்பகலில் வாட்ஸ்அப் சேவைகள் முடங்கின.

சாதாரண அரட்டைகள் மட்டுமின்றி வணிகம் தொடர்பான விஷயங்களிலும் வாட்ஸ்அப் முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக அரசு அலுவலகங்களில் வாட்ஸ்அப் குரூப் மூலம் உயர்மட்ட அதிகாரிகளும் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதியம் 12.45 மணியளவில் வாட்ஸ் அப் அப்ளிகேஷன் திடீரென நிறுத்தப்பட்டது. இது குறித்து பல பயனர்கள் வாட்ஸ்அப் நிறுவனத்தை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக #WhatsappDown என்ற ஹேஷ்டேக் மூலம் பல பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யவில்லை என்று புகார் கூறி வருகின்றனர்.

இந்த திடீர் பணிநிறுத்தம் குறித்து வாட்ஸ்அப்பில் இருந்து உடனடி விளக்கம் எதுவும் இல்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் செயலிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வாட்ஸ்அப் விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் திடீரென நிறுத்தப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படும்.

Previous articleமுட்டை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் : வெளியான தகவல்!
Next articleயாழ் பல்கலைக்கழக முன்னைநாள் மாணவன் பரிதாப மரணம் !