இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : அதில் பயணித்தவர்களின் நிலை ?

இலங்கை போக்குவரத்து சபைக்கும் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவமானது இன்று பகல் மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கேகாலையில் இருந்து கண்டி நோக்கி தனியார் பஸ்ஸொன்றும், மாவனல்லையிலிருந்து கேகலை நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த 38 பேர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், விபத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கை பெண் ஜனனியிடம் வேலையை காட்டும் அசல் கோளாறு!
Next articleஇலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் மரணம்!