இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் மரணம்!

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ரோமன்-அலெக்சாண்டர் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் தனியாக வசித்து வந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞரின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மெல்பேர்ன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளைஞரின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து மெல்பேர்ன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleஇரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : அதில் பயணித்தவர்களின் நிலை ?
Next articleதிடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி! தெய்வாதீனமாக தப்பிய குடும்பம்!