யாழில் திருடிய வீட்டில் சமைத்து சாப்பிட்டு உல்லாசமாய் இருந்த திருடர்கள் : மடக்கிப்பிடித்த அயலவர்கள்!

யாழில் திருட வந்த வீட்டில் அனைத்தயும் திருடி விட்டு அதே வீட்டில் சமைத்து உண்டு சாராயம் குடித்து உல்லாசமாய் இருந்த திருடனை வீட்டின் உரிமையாளர் மடக்கிப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ்.மூளாய் – வேரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உரிமையாளர் வெளியில் சென்ற வேளை வீட்டினை கொள்ளையடிக்க வந்த இருவர் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு அதே வீட்டில் சமைத்து மது அருந்தி உல்லாசமாய் இருந்துள்னர்.

இந்நிலையில் மறுநாள் காலை வீட்டிற்கு வந்த உரிமையானர் திருடர்களைள பார்த்ததையடுத்து அயலவர்களை கூப்பிட்டபோது ஒருவர் தப்பித்து சென்றுள்ளார்.

இதனையடுத்து மற்றவரை உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மடக்கிபிடித்து நையப்புடத்தனர்.

பிடிக்கப்பட்ட கொள்ளையர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மூளாய் வேரம் பகுதியை சேர்ந்த கொள்ளையர் தப்பிச் சென்றுள்ள நிலையில், சுன்னாகத்தினை சேர்ந்தவர் மக்களால் பிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தப்பித்துச் சென்றவருக்கு வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாகவும், திறந்த பிடியாணையொன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பாவித்துள்ளதாக மருத்துவ அறிக்ககையில் தெரியவந்துள்ளது!
Next articleஇலங்கைத் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்கு தடை !