சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பிகுமார் அமைப்பின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேரர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleஇலங்கைத் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்கு தடை !
Next articleயாழ்ப்பாணம் வருகை தந்த அமெரிக்க துணைத் தூதர்!