யாழ்ப்பாணம் வருகை தந்த அமெரிக்க துணைத் தூதர்!

இன்றையதினம் யாழிற்கு அமைரிக்க தூதுவர் டக் சோனெக் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதா எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் பல அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடியதையடுத்து தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக அமெரிக்க துணை தூதர் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தரப்புக்கள் தனியாகவும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், வாசுகி சுதாகர் ஆகியோர் தனியாகவும் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது சமகால நிலைமைகள் தொடர்பில் அமெரிக்க துணைத் தூதர் அரசியல் பிரதிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

Previous articleசிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி!
Next articleஏறாவூர் நகர சபையின் உப தவிசாளர் திடீர் மரணம் : வெளியான விபரம்!