இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏழு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இந்திய மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ​​அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதில் இருந்த 7 மீனவர்களையும் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleவலி வடக்கில் சட்ட விரோத மண் அகழ்வு – தான் அனுமதி வழங்கவில்லை என்கிறார் தவிசாளர்!
Next articleயாழில் இ.போ.ச ஊழியர்கள் அடிதடி; 11 பேர் கைது !