வவுனியாவில் பயங்கர விபத்து சம்பவம்: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நேற்று (26-10-2022) வவுனியா, புளியங்குளம், ராமனூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

பாரவூர்தி சாரதியான அம்பட்டாவைச் சேர்ந்த 38 வயதுடைய சமித்த அதலங்க பண்டார என்பவரே விபத்தில் காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபாடசாலை மாணவரை மோதி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு வீதியோரத்தில் இறக்கிவிட்டுச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி!
Next articleயாழில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த இளைஞனை கத்தியால் வெட்டிய குடும்பஸ்த்தர் !