யாழில் 15 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி கல்யாணம் செய்து கொண்ட 20 வயது பிரான்ஸ் இளைஞன் கைது !

யாழில் 15 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி கல்யாணம் செய்து கொண்ட 20 வயது பிரான்ஸ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்றைய தினம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பிரான்சில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனும், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய யுவதியும் பாடசாலை மாவட்டத்தை வீடாகக் கொண்டு காதலித்து வந்தனர்.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த இளைஞன் தனது காதலியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவானார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரால் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில் தீவிர நடவடிக்கையை முன்னெடுத்த காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சிறுமி மற்றும் இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு அனுப்பவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Previous articleகிளிநொச்சியில் காதலனின் பெயர்களை தொடைகளில் பதித்த பாடசாலை மாணவிகள் : எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர்!!
Next articleதிடீரென தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகை : சோகத்தில் திரையுளகம்!