யாழ் பிரபல பாடசாலை முன்னால் நடக்கும் மோசமான செயல் !

யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலத்தை வீசிய நபர் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இன்று பள்ளி முன், பம்பஸ் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டன. இதனால் பாடசாலைக்கு அருகில் வசிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இது குறித்து மாநகர சபைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், மாநகர சுகாதார ஊழியர்கள் அவற்றை அகற்றும் போது, ​​அதிலிருந்து மோட்டார் சைக்கிள் காப்புறுதி அட்டை மீட்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கழிவுகளை அவரே வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அவர் மீது காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleதிடீரென தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகை : சோகத்தில் திரையுளகம்!
Next articleபேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!