பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

1997ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர் செல்வநாயகம் வரப்பிரகாசம் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

பிரதான சந்தேகநபரான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரனின் இருப்பிடம் தெரியாத நிலையில், அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பாதிக்கப்பட்ட செல்வநாயகம் வரப்பிரகாசம், அப்போது முதலாம் ஆண்டு பொறியியல் மாணவராக இருந்தவர் எனவும், மனிதாபிமானமற்ற சித்திரவதை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிரேத பரிசோதனையின் போது, ​​உடல் உழைப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தசைக் காயம் காரணமாக ஏற்பட்ட கடுமையான சிறுநீரக செயலிழப்பு மரணத்திற்கான காரணம் என்று தடயவியல் மருத்துவ அதிகாரி கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், தாம் மேற்கொண்ட அதீத உடற் பயிற்சியினால், உள் காயங்களுக்கு உள்ளாகி, மேற்படி மாணவன் உயிரிழந்துள்ளார்.