வாகனங்களை வைத்திருப்போருக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாகனத் திருட்டுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த வருடத்தில் இதுவரை 1,406 வாகன திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் வாகன திருட்டு சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

செப்டம்பர் 30, 2022 வரை மொத்தம் 1,406 வாகனங்கள் திருடப்பட்டுள்ளன.

இருப்பினும், கடந்த ஆண்டு (2021) முழுவதும் 1405 வாகனத் திருட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

திருடப்பட்ட வாகனங்களில் 12 பேருந்துகள், 25 வேன்கள், 16 பாரவூர்திகள், 14 கார்கள், 311 முச்சக்கர வண்டிகள், 1116 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 12 வகையான வாகனங்கள் அடங்குகின்றன.

மேலும், திருடப்பட்ட பல வாகனங்கள் பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், வாகன திருட்டு சம்பவங்கள் குறித்து வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் வாகனங்களை நிறுத்துமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleபிக் பாஸில் கதறி கதறி அழுத ஜனனி! இது தான் காரணம் !
Next articleசிறுவனன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் கைதானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!