சிறுவனன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் கைதானவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

மாத்தறை திஹகொட பிரதேசத்தில் 15 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் இன்று (29) உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது அதனை தடுத்து நிறுத்திய போது திஹகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறிச் சுடப்பட்டது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவாகனங்களை வைத்திருப்போருக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
Next articleயாழ். பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு!