குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து! 60 பேர் பலி – பலர் காணாமல்போயுள்ளதாக தகவல் !

குஜராத்தில் மச்சு ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 60 பேர் உயிரிழந்தனர்.

மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் மோர்பியில் கட்டப்பட்ட கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

மேற்படி பாலத்தின் திருத்தப் பணிகள் அண்மையில் நிறைவடைந்ததையடுத்து, கடந்த 26ஆம் திகதி பாலம் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

இன்று பாலத்தில் 500க்கும் மேற்பட்டோர் இருந்தபோது திடீரென பாலம் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில், பொதுமக்கள், தீயணைப்பு படையினர், பொலிஸார் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக முதற்கட்டமாக ஆற்றில் 100 பேர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.