சட்டவிரோத மது உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது !

கொஸ்கம உறுவெல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பிரிவுக்கு அமைய, குறித்த நபர் நேற்று விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 550 மில்லிலிட்டர் கோடா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழ், விழிப்புணர்வற்றோர் சங்கம் நடாத்திய வெள்ளைப் பிரம்பு தினம்!
Next articleயாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நாள்!