யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நாள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை, விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் 32வது ஆண்டு நினைவு தினம்.

யாழ்ப்பாணம் பெரிய மொஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று மாலை 4 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றதுடன் கறுப்புக்கொடிகளும் ஏற்றப்பட்டன.

வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் அவலங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், இதுவரை சில முஸ்லிம் குடும்பங்களே மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேறிய முஸ்லிம்களின் பல அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்படி யாழ்.மொஹைதீன் ஜும்மா பள்ளியின் தலைவர் சாருல் அனாம், மௌலவி ஹக்கீம், மௌலவி அலியார் பைசார் காசிமி, யாழ் முஸ்லிம் யூனியன் தலைவர் ஆரிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous articleசட்டவிரோத மது உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது !
Next articleதிடீரென எரிபொருள் விலையில் மாற்றம்! : வெளியான அறிவிப்பு!