யாழ். மாவட்ட செயலக பகுதியில் அமைதியின்மை!

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ். அண்மையில் மாவட்ட செயலகத்திற்குள் பிரவேசித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

முன்னதாக யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்தனர். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாவட்ட செயலகத்திற்குள் பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடமாடும் சேவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விஜயதாச ராஜபக்சவுக்கு எதிர்ப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதில் கலந்து கொண்டுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், ஓ.எம்.பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணை மட்டுமே, இரண்டு லட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சர் அவுட், விஜயதாச ராஜபக்ஷ அவுட் போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇலங்கையில் டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் !
Next articleகனடாவில் யாழ். தமிழர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் – பொலிஸார் வெளியிட்ட தகவல் !