யாழில் சூரன் போரில் நடந்த வாள்வெட்டில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

யாழில் சூரன் போரில் இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் இலக்காகி தீவிர சிகிச்சை பிரிவிலை் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று யாழ்.சங்கரத்தை பகுதியில் உள்ள பங்குரு முருகன் கோவிலில் இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை கிழக்கு சிட்டக்கேணியைச் சேர்ந்த நவரதனராசா ஜனந்தன் (வயது 33), வட்டுக்கோட்டை மேற்கைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் கஜானந்தன் (வயது 38) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர்.

சங்கரத்தை பங்குமுருகன் கோயிலில் சூரன் போர் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனிடையே கோவிலில் இரு இளைஞர் குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதங்கள் கைகலப்பாக மாறி வாள் வெட்டுகளில் முடிந்தது. சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleகனடாவில் யாழ். தமிழர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் – பொலிஸார் வெளியிட்ட தகவல் !
Next articleடுவிட்டரின் ‘புளூ டிக்’ குறியீடு – மாதம் 19.99 அமெரிக்க டொலர்கள் கட்டணம்..!