டுவிட்டரின் ‘புளூ டிக்’ குறியீடு – மாதம் 19.99 அமெரிக்க டொலர்கள் கட்டணம்..!

எலோன் மஸ்க் கட்டுப்பாட்டில் உள்ள ட்விட்டர் மூலம், போலி கணக்குகளை ஒழிக்க அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ட்விட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் என்று எலோன் மஸ்க் கூறினார்.

தற்போது ட்விட்டரில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் ப்ளூ டிக் பயன்படுத்துகின்றனர்.

இந்த ட்விட்டர் கணக்கு தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு என்பதை உறுதிப்படுத்த, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீல நிற டிக் சின்னம் இருக்கும்.

ட்விட்டர் புளூ டிக்கிற்கு பயனர்கள் USD 4.99 (ரூ 1,831 வரை) செலுத்த வேண்டியிருந்தது.

இதன் மூலம், பயனர்கள் ட்விட்டரில் பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்தலாம்.

மேலும் நீங்கள் போட்ட பதிவுகளை எடிட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கை உறுதி செய்யும் ப்ளூ டிக்கிற்கு பயனர்களிடம் இருந்து மாதம் ரூ.7335.85 (US$19.99) வரை கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த அறிவிப்பில் இருந்து 90 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால், மாற்றம் பயனர் பெயருக்கு அடுத்துள்ள நீல நிற டிக் சின்னத்தை அகற்றும்.

Previous articleயாழில் சூரன் போரில் நடந்த வாள்வெட்டில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
Next articleபாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு..! இன்று நள்ளிரவு நடைமுறை !