ஹெலோவீன் திருவிழா: உயிரிழந்த இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியான சோக தகவல் !

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் பண்டிகையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கண்டி உடதலவின்ன மடிகே பகுதியைச் சேர்ந்த மொஹமட் ஜினாத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

தென்கொரியாவில் இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வந்த இவர் இரண்டு மாதங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தென்கொரியாவுக்கு திரும்பினார்.

இந்நிலையில் நேற்று நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

Previous articleபாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு..! இன்று நள்ளிரவு நடைமுறை !
Next articleயாழில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞன் : வெளியான காரணம்!