யாழ். பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் யாளியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மூன்று குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழைக்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த அடைமழை காரணமாக வீட்டில் வெள்ளம் புகுந்ததால் யாழ்ப்பாணம் – காக்கைதீவு பகுதியில் வசிக்கும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் காக்கைதீவு கடற்றொழிலாளர் சங்க கட்டிடத்திற்குள் தங்கியுள்ளனர்.
Nāṭṭil kaṭanta cila nāṭkaḷāka cīraṟṟa

Previous articleஇன்றைய ராசிபலன் 01/11/2022
Next articleயாழ் மழைவீழ்ச்சி பதிவை வெளியிட்ட அதிகாரி!